இந்தியா
முடக்கப்பட்ட வானிலை ஆய்வு மைய டுவிட்டர் கணக்கு

முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது

Published On 2022-04-09 22:43 GMT   |   Update On 2022-04-09 22:43 GMT
உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.
புதுடெல்லி:

சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது.
 
நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கச்செய்யும் பணியில் இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்த மையத்தின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் நேற்று முடக்கினர். 

இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர்-ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு வானிலை மைய டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News