இந்தியா
ராம்நாத் கோவிந்த், மோடி

ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Update: 2022-04-09 13:12 GMT
ராம நவமியை முன்னிட்டு, குஜராத் உமியா மாதா கோவில் விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:

ராமர் பிறந்த தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. நாளை ராம நவமியையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். 

நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி,  சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்.

ராம நவமியை முன்னிட்டு  குஜராத்தில் உள்ள கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் நாளை பிரதமர் மோடி  காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

2008-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, இந்தக் கோவிலின் திறப்பு விழா நடைபெற்றது. மோடி வழங்கிய ஆலோசனை அடிப்படையில், பல்வேறு சமூக மற்றும் சுகாதார திட்டங்களை இந்த கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News