இந்தியா
சர்க்கரை ஏற்றுமதி

நடப்பு ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி 80 லட்சம் டன்களை தாண்டும்: மத்திய அரசு

Published On 2022-04-08 16:53 GMT   |   Update On 2022-04-08 16:53 GMT
நடப்பு ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 80 லட்சம் டன்களைத் தாண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நடப்பாண்டுக்கான இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 80 லட்சம் டன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும் என்று உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்தார்.

"நாங்கள் சர்க்கரை ஏற்றுமதியில்  சிறப்பாக செயல்படுகிறோம் என்று கூறிய அவர், இந்த ஆண்டு 80 லட்சம் டன்களை கடந்து, முந்தைய ஆண்டின் அளவைக் கடப்போம்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாட்டில் கடந்த ஆண்டு 72.3 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்து சாதனை படைக்கப்பட்டது. அரசாங்க மானியத்தின் உதவியுடன் அதிகபட்ச ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு சர்க்கரை ஏற்றுமதி அரசு மானியம் இல்லாமல் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News