இந்தியா
தமிழச்சி தங்கபாண்டியன்

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

Update: 2022-04-04 10:27 GMT
சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கி.மீ.க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை என்று கூறிய அவர்,  சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கச்சாவடி உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கோரையாறு ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என திமுக எம்.பி. ஞானதிரவியம் கோரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News