இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால்

ராமாயணம், பகவத் கீதையில் உள்ள இந்துத்துவாவை நான் நம்புகிறேன்- அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

Published On 2022-03-29 02:42 GMT   |   Update On 2022-03-29 02:42 GMT
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி:

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,  பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா அரசியல் குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.  

அண்மையில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக இந்துத்துவா கொள்கை மூலம் வெற்றி பெற முடிந்ததற்கு அங்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராமாயணம், பகவத் கீதையில் உள்ள இந்துத்துவாவை தாம் நம்புவதாகவும், ராமாயணத்திலும், கீதையிலும் எது குறிப்பிடப்பட்டாலும் அது இந்துத்துவம், ராமாயணத்தில் ராமர் என்ன சொன்னாரோ அதுவே இந்துத்துவம் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் நமக்குள் பகைமையை ஒருபோதும் கற்பிக்கவில்லை. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத் சட்டசபைத் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

எனினும் குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது பிரதமர் மோடியை குறி வைத்து அல்ல என்றும், அவர்  தமது பிரதமர், இந்த நாட்டுக்கும் பிரதமர் என்றும்  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News