இந்தியா
யோகி ஆதித்யநாத்

வரும் 25ந் தேதி உத்தர பிரதேச முதலமைச்சராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

Published On 2022-03-18 18:02 GMT   |   Update On 2022-03-19 00:56 GMT
உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
லக்னோ:

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது. 

இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேசத்தில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சராக 2வது முறையாக வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். 

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வரும் 25 ந் தேதி ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடை பெறுகிறது.

Tags:    

Similar News