இந்தியா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

படுதோல்வி எதிரொலி: 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா அறிவுறுத்தல்

Update: 2022-03-15 13:57 GMT
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதன் எதிரொலியால், காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்ய சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ‘ஏவுகணை’ பாகிஸ்தானில் விழுந்தது விபத்துதான் - அமெரிக்கா கருத்து
Tags:    

Similar News