இந்தியா
முதல் மந்திரி மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள இடைத்தேர்தல் - சத்ருகன் சின்ஹா, சுப்ரியா சுலேவை வேட்பாளர்களாக அறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ்

Published On 2022-03-13 07:18 GMT   |   Update On 2022-03-13 07:18 GMT
மேற்கு வங்காளம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் காலியாக உள்ள அசன்சால் பாராளுமன்ற தொகுதி மற்றும் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 17-ம் தேதி தொடங்கி 24ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 25-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்ப பெறுவதற்கு மார்ச் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இடைத்தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அசன்கால் பாராளுமன்ற தொகுதிக்கு சத்ருகன் சின்ஹாவும், பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு சுப்ரியா சுலேவும் வேட்பாளர்களாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதேபோல் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு, பீகாரில் உள்ள போச்சகன், சத்தீஸ்கரில் உள்ள கைராகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 

Tags:    

Similar News