இந்தியா
சோனியா காந்தி

சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற குழு கூட்டம்

Update: 2022-03-13 06:21 GMT
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை தொடங்குகிறது.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது அக்கட்சியின் முன்னணி தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், நாளை நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள், விவசாயிகள் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை எழுப்ப முயற்சிப்போம் என மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.  

Tags:    

Similar News