இந்தியா
பிரதமர் மோடி

4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2022-03-10 17:18 GMT   |   Update On 2022-03-10 17:18 GMT
உத்தர பிரதேசத்தில் 37 ஆண்டுக்கு பின் ஆளும்கட்சியே மீண்டும் வென்றுள்ளது. உ.பி.யில் முதல் முறையாக பா.ஜ.க. 2-வது தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

4 மாநில தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஹோலி மார்ச் 10-லிருந்து தொடங்கும் என தொண்டர்கள் உறுதி அளித்தனர். ஆனால், ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கி விட்டது.

இந்த வெற்றி மூலம் மக்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம். பா.ஜ.க. அரசு மீதுள்ள மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி காண்பிக்கிறது.

கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபணமாகியுள்ளது. உத்தரகாண்டில் பா.ஜ.க. புதிய வரலாறு படைத்துள்ளது.

பா.ஜ.க. மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது. 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை ஆகும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News