இந்தியா
ஆம் ஆத்மி சின்னம், மணிஷ் சிசோடியா

கெஜ்ரிவால் ஆட்சி முறைக்கு பஞ்சாப் மாநிலம் வாய்ப்பு வழங்கியுள்ளது - டெல்லி துணை முதலமைச்சர் பேட்டி

Published On 2022-03-10 06:49 GMT   |   Update On 2022-03-10 06:49 GMT
பஞ்சாப்பை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்றும் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

5 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சியை அமைக்கிறது.

இதையொட்டி அந்த கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

பஞ்சாப் தேர்தல் வெற்றி குறித்து ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா,  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

கெஜ்ரிவால் மாடல் ஆட்சிக்கு பஞ்சாப் மாநிலம் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. இன்று அவரது (கெஜ்ரிவால்) ஆட்சிமுறை தேசிய அளவில் விரிவடைந்துள்ளது. இது ஆம்ஆத்மிக்கு கிடைத்த வெற்றி. 

கோவா, உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தோம், ஆனால் கவனம் பஞ்சாபில் இருந்தது.படிப்படியாக இந்த மாநிலங்களில் உள்ள மக்களும் எங்கள் கட்சியை நம்பத் தொடங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News