இந்தியா
ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடி ஆய்வு

தேர்தல் பிரசாரத்தில் வாரணாசி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி

Published On 2022-03-04 19:02 GMT   |   Update On 2022-03-04 19:02 GMT
உத்தர பிரதேசம் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது சாலையோர டீக்கடைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு டீ குடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
லக்னோ:

உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

அங்கு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் காரில் சென்ற பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்பின், பிரசாரம் நடைபெற்ற பகுதிக்கு அருகே அமைந்திருந்த டீக்கடைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பா.ஜ.க. வேட்பாளருடன் இணைந்து பிரதமர் மோடி டீ குடித்து மகிழ்ந்தார்.  

Tags:    

Similar News