இந்தியா
மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் - மன்சுக் மாண்டவியா

Published On 2022-03-03 18:37 GMT   |   Update On 2022-03-03 18:37 GMT
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில், இந்தியாவில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் 97 சதவீதத்துக்கும் கூடுதலானோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News