இந்தியா
உத்தர பிரதேச தேர்தல்

உத்தர பிரதேசத்தில் இன்று 6-ஆம் கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் நடை பெறுகிறது

Published On 2022-03-03 01:01 GMT   |   Update On 2022-03-03 01:01 GMT
இன்றைய தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களம் காண்கின்றனர்.
பல்ராம்பூர்:


உத்தர பிரதேச சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. 6ம் கட்ட தேர்தல்  10 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது.

அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று நடைபெறும் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் இன்றைய தேர்தலில் களம் காண்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு , பாஜக அமைச்சர் பதவியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்பட மொத்தம் 676 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர். 

மொத்தம் 2,14,62,816 வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். 
Tags:    

Similar News