இந்தியா
மாணவர் தற்கொலை

பப்ஜியால் விபரீதம்: செல்போன் வாங்கி தர மறுத்ததால் ப்ளஸ் 2 மாணவர் தற்கொலை

Update: 2022-02-18 11:14 GMT
பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் கொண்ட இவர் ஆன்லைன் வகுப்பு எனக் கூறி தனது தாத்தாவின் செல்போனை பயன்படுத்தி பல மணி நேரம் பப்ஜி விளையாடி வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குமார். ப்ளஸ் 2 படித்து வந்தார். பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் கொண்ட இவர் ஆன்லைன் வகுப்பு எனக் கூறி தனது தாத்தாவின் செல்போனை பயன்படுத்தி பல மணி நேரம் பப்ஜி விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆதித்யா தனது பிறந்தநாளான பிப்ரவரி 13-ம் தேதியன்று தனக்கு செல்போனை பிறந்தநாள் பரிசாக வழங்கும்படி பெற்றோரை வற்புறுத்தியதாக தெரிகிறது. ப்ள்ஸ் 2 படித்து வருவதால் நன்றாக படித்து பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் செல்போன் வாங்கி தருவதாக அவரது பெற்றோர் உறுதியளித்துள்ளனர்.

பிறந்த நாள் முடிந்து 5 நாட்கள் ஆன நிலையில், ஆதித்யா நேற்று முன்தினம் தனது இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆதித்யாவின் அறையில் விளக்கு எரிந்துக் கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் கதவைத் தட்டி பார்த்துள்ளனர். ஆதித்யா கதவு திறக்காததை அடுத்து சந்தகமடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, ஆதித்யா தனது தாயின் புடவையில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக ஆதித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆதித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆதித்யாவின் பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆதித்யாவின் உடல் பிரதேச பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பப்ஜி விளையாட்டின் மீது இருந்த மோகத்தால் உயிரைவிட்ட மாணவரின் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்.. உத்தரபிரதேச்தில் மசாஜ் சென்டரில் தீ விபத்து: இளம்பெண்-ஊழியர் பலி
Tags:    

Similar News