இந்தியா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 173 கோடியை தாண்டியது

Published On 2022-02-15 01:09 IST   |   Update On 2022-02-15 01:09:00 IST
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஒன்றை கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்
புதுடெல்லி:

கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் பயனாளர்களுக்கு போட ப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணக்கை 173 கோடியே 38 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இதுவரை 5 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், ஒரு கோடியே 63 லட்சம் பேர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்றை எதிர்த்து இளம் இந்தியா முழு சக்தியுடன் போராடுகிறது, நாடு முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Similar News