இந்தியா
பா.ஜ.க.

நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள கட்சி - பா.ஜ.க.வுக்கு எந்த இடம் தெரியுமா?

Published On 2022-01-28 18:11 GMT   |   Update On 2022-01-28 18:11 GMT
நாட்டில் உள்ள 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ. 6,988.57 கோடியாக உள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

ஏ.டி.ஆர். (ADR)எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, அவற்றின் சொத்து உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்.

அதன்படி, 2019-20ம் நிதியாண்டிற்கான தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் சொத்து விவரம், நிதி குறித்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் 7 தேசிய கட்சிகள், 44 பிராந்திய கட்சிகளும் அடக்கம்.

இந்நிலையில், தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.க. ரூ. 4847.78 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இது அனைத்து தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 69.37 சதவீதம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

இதேபோல், 44 பிராந்திய கட்சிகளின் சொத்து விவரம், நிதி குறித்த விவரங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. 44 கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடியாக உள்ளது. டாப் 10 இடங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.2028.715 கோடியாக உள்ளது.

பிராந்தியக் கட்சிகளில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ரூ.563.47 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 
சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூ.301.47 கோடியுடன் 2-ம் இடத்திலும், அ.தி.மு.க. ரூ.267.61 கோடியுடன் 3-ம் இடத்திலும் உள்ளது.

Tags:    

Similar News