கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,225 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிற்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்றைய பாதிப்பைவிட இன்று அதிகம்: புதிதாக 54,537 பேருக்கு கொரோனா
பதிவு: ஜனவரி 28, 2022 18:44 IST
மாற்றம்: ஜனவரி 28, 2022 18:56 IST
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை வீசி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், தென்இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,537 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,225 பேர் குணமடைந்துள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே விடுபட்ட 81 உயிரிழப்புகள், புதிய கொரோனா வழிக்காட்டு நெறிமுறையின்படி 258 உயிரிழப்புகள் கொரோனா பலியில் சேர்க்கப்பட்டுள்ளதால், இதுவரை கேரளாவில் 52,786 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :