இந்தியா
ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும்- அதிகாரி தகவல்

Update: 2022-01-28 08:03 GMT
ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா வைரஸ் இன்னும் பரவலாக உள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என நோய்க்கட்டுப்பாட்டுக்கான தேசிய மைய இயக்குனர் சுஜித்சிங் கூறியுள்ளார்.

ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா வைரஸ் இன்னும் பரவலாக உள்ளது. கடந்த மாதத்தைவிட இந்த மாதம் பரிசோதனை செய்ததில் 75 சதவீதம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் டெல்டாவை விட ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... ‘ஒயின்’ மதுபானம் அல்ல: சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க மராட்டிய மாநில அரசு அனுமதி

Tags:    

Similar News