இந்தியா
யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ்

ஜின்னாவை வழிபடுபவர்கள் - அகிலேஷ் மீது யோகி ஆதித்யநாத் கடும் தாக்கு

Published On 2022-01-28 06:57 GMT   |   Update On 2022-01-28 09:35 GMT
தாய் நாட்டிற்காக நாங்கள் உயிரைத் தியாகம் செய்கிறோம் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதே மாநில சட்டசபைக்கு, பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  

அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கும், அரசியல் தலைவர்களின் பேரணிக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சமூக வளைதளங்கள் மூலம் அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  உத்தரப்பிரதேசத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் 29 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் 13 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று காலை வெளியிட்ட தமது ட்வீட்டர் பதிவில், அகிலேஷ்யாதவ் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். 

அவர்கள் ஜின்னாவை வழிபடுபவர்கள், நாங்கள் சர்தார் பட்டேலை வணங்குபவர்கள். பாகிஸ்தான் அவர்களுக்குப் பிரியமானது, தாய்நாட்டிற்காக நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தான் இந்தியாவின் அரசியல் எதிரி மட்டுமே என்று அகிலேஷ் யாதவ் அண்மையில் தெரிவித்திருந்த  நிலையில், பாஜக தலைவர்கள் அவரை பாகிஸ்தான் ஆதரவாளர் என தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News