கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 627 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 2,51,209 பேருக்கு கொரோனா
பதிவு: ஜனவரி 28, 2022 10:28 IST
மாற்றம்: ஜனவரி 28, 2022 11:03 IST
கொரோனா பரிசோதனை
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் மேலும் 2,51,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,47,443 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை 21,05,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா பரவும் விகிதம் 15.88 சதவீதமாக உள்ளது. மொத்தம் 1,64,44,73,216 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :