இந்தியா
கொரோனா பரிசோதனை

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 51,739 பேருக்கு தொற்று

Published On 2022-01-28 03:08 GMT   |   Update On 2022-01-28 03:08 GMT
கேரளாவில் நேற்று 68 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 3.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருவனந்தபுரம் :

கேரளாவில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்தவகையில் கொரோனா வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 25-ந்தேதி 55,475 பேர் தொற்றுக்கு உள்ளாக இருந்தனர்.

26-ந்தேதி 49,771 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மீண்டும் 50 ஆயிரத்தை கடந்து 51,739 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.16 லட்சம் மாதிரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. இதைப்போல நேற்று 68 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இதன் மூலம் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 52,343 ஆகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் தற்போது 3.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News