இந்தியா
சோனியா காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை

Published On 2022-01-28 01:55 GMT   |   Update On 2022-01-28 01:55 GMT
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் சோனியா காந்தி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான வியூகம் வகுக்கிறார்.
புதுடெல்லி :

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) வியூகம் வகுக்கிறார்.

இதற்காக பாராளுமன்ற வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டத்தை சோனியா காந்தி இன்று கூட்டியுள்ளார்.

சோனியா தலைமையிலான அக்குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், கே.சுரேஷ், ஜெயராம் ரமேஷ், மாணிக்கம் தாகூர், ரவ்நீத்சிங் பிட்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து மூத்த தலைவர்களுடன் விவாதித்து சோனியாகாந்தி வியூகம் வகுப்பார் என்று தெரிகிறது.
Tags:    

Similar News