இந்தியா
உடற் பயிற்சி செய்யும் எல்லை பாதுகாப்பு படை வீரர்

40 வினாடிகளில் 47 புஷ்-அப்: வைரலாகும் பி.எஸ்.எப்.வீரரின் வீடியோ

Published On 2022-01-25 18:07 GMT   |   Update On 2022-01-25 21:28 GMT
இந்திய எல்லையை பாதுகாக்கும் பி.எஸ்.எப். வீரர்கள் எந்த தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி:

குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், பயங்கரவாத ஊடுருவல்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எல்லைப் பாதுகாப்பு படையான பி.எஸ்.எப். தனது வீரர் ஒருவர் கடும் பனி பிரதேசத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

வைரலாகி உள்ள இந்த வீடியோவில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் 40 வினாடிகளில் 47 புஷ்-அப் உடற்பயிற்சியை அனாயசமான செய்கிறார். கடும் பனி உள்பட எந்த வானிலை மாற்றத்திலும் நாட்டுக்காக எதையும் சாதிப்போம் என்பதை எடுத்தும் காட்டும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  

41 வினாடி நீளமுள்ள இந்த விடியோ கிளிப் ஏற்கனவே 34,900 பார்வைகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 2,876 லைக்குகளைப் பெற்றுள்ளது. இது இதுவரை 447 முறை ரீட்வீட் செய்யப் பட்டுள்ளது.  40 வினாடிகள் 47 புஷ்-அப் என்ற ட்வீட் தலைப்புடன் இதனை BSF தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.   

பார்வையாளர் ஒருவர் எங்கள் குளிர்கால சிப்பாய் ஒரு போதும் தோற்கமாட்டார் என்றும், மற்றொரு நெட்டிசன், எங்கள் பி.எஸ்.எஃப் மற்றும் அனைத்து இந்திய ஆயுதப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News