இந்தியா
காங்கிரஸ்

உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் விலையை ரூ.500-க்கு கொண்டு வருவோம்- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

Published On 2022-01-25 07:45 GMT   |   Update On 2022-01-25 07:45 GMT
உத்தரகாண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் விலையை ரூ.500 ஆக குறைப் போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.

டேராடூன்:

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அங்கு பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

உத்தரகாண்டில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.

இந்தநிலையில் உத்தரகாண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் விலையை ரூ.500 ஆக குறைப் போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.

இதுதொடர்பாக உத்தரகாண்ட் காங்கிரஸ் பொறுப்பாளரும், சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகல் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நோக்க பாடல் 4 வழிபாட்டு தலங்கள், 4 திட்டங்கள் ஆகியவற்றை கொண்டது. பணவீக்கம், வேலையின்மை, சமையல் கியாஸ் விலை மற்றும் சுகாதார சேவை ஆகிய 4 முக்கிய பிரச்சினைகளை உத்தரகாண்ட் மக்கள் எதிர் கொண்டு உள்ளனர். இதில் எங்களது கவனம் இருக்கும்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த போது சமையல் கியாஸ் விலை 400-க்கு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது விலை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் விலையை ரூ.500-க்கு கொண்டு வருவோம்.

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கவுரவமான வாழ்க்கை வாழ 5 லட்சம் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

உத்தரகாண்டில் சுகாதார சேவைகள் கவலைக்குரிய விசயமாக உள்ளது. சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம். தேவைப்பட்டால் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவோம்.

5 ஆண்டுகளில் 3 திறமையற்ற முதல்-மந்திரிகளை வழங்கியதன் மூலம் உத்தரகாண்ட் மக்களை பா.ஜனதா ஏமாற்றி விட்டது. அவர்கள் தேர்தலில் போட்டியிட பயந்தனர். உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

Tags:    

Similar News