இந்தியா
ரெயில்

கடந்த 9 மாதங்களில் 35 ஆயிரம் ரெயில்கள் ரத்து

Published On 2022-01-24 02:54 GMT   |   Update On 2022-01-24 02:54 GMT
அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 120-க்கு மேற்பட்ட மிக முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ரெயில்வே கூறியுள்ளது.
புதுடெல்லி:

நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில், பராமரிப்பு காரணங்களுக்காக 35 ஆயிரத்து 26 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரெயில்வே துறை இந்த பதிலை அளித்துள்ளது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் இதில் கூறப்படவில்லை.

மேலும், இதே காலகட்டத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 483 ரெயில்கள் திட்டமிட்ட நேரத்தை தாண்டி தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரெயில்வே தெரிவித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 120-க்கு மேற்பட்ட மிக முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் பனிமூட்டத்தால் 1,500 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பனிமூட்டத்திலும் ரெயில்களை இயக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்னர். மேலும், ரெயில் தாமதமான நேரத்துக்கு ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News