இந்தியா
குடியரசு தின அணிவகுப்பு(கோப்பு படம்)

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 70 ஆண்டு கால சீருடையை அணிந்து பங்கேற்கிறது ராணுவம்

Update: 2022-01-24 02:27 GMT
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 70 ஆண்டுகளில் அவ்வப்போது மாறி வந்த ராணுவ சீருடைகளை அணிந்து ராணுவத்தினர் பங்கேற்கிறார்கள்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மொத்தம் 14 குழுக்கள் பங்கேற்கின்றன. இவை ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்களும், கடற்படை, விமானப்படை. ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு குழுவும், துணை ராணுவப்படைகளை சேர்ந்த 4 குழுக்களும், தேசிய மாணவர் படையை சேர்ந்த 2 குழுக்களும் ஆகும்.

ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள் இத்தனை ஆண்டு காலத்தில் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன. கொரோனா காலம் என்பதால், ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதிலாக 96 பேர் மட்டும் இடம் பெறுகிறார்கள்.

ராஜ்புத் ரெஜிமெண்ட்டை சேர்ந்த முதல் குழு, 1950-களில் இருந்த ராணுவ சீருடையை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. அசாம் ரெஜிமெண்டை சேர்ந்த 2-வது குழு, 1960-களில் இருந்த சீருடை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது.

ஜம்மு காஷ்மீர் காலாட்படையை சேர்ந்த 4-வது குழு, 1970-களின் சீருடை அணிந்து, 7.66 எம்.எம். ரக துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. 4 மற்றும் 5-வது குழுக்கள், தற்போதைய ராணுவ சீருடை அணிந்து பங்கேற்கின்றன.

பாராசூட் ரெஜிமெண்டை சேர்ந்த 6-வது குழு, இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை அணிந்து பங்கேற்கிறது. டவோர் ரக துப்பாக்கியையும் பயன்படுத்துகிறது.
Tags:    

Similar News