இந்தியா
திறந்த வெளி வகுப்புகளை நடத்த மேற்கு வங்க மாநில கல்வித்துறை முடிவு

ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு திறந்த வெளி வகுப்புகள் - மேற்கு வங்க மாநில கல்வித்துறை திட்டம்

Published On 2022-01-23 18:52 GMT   |   Update On 2022-01-24 00:46 GMT
கொரோனா கட்டுப்பாடுகளால் கல்வியை இழந்துள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு மைதானத்தில் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை அறிமுகப்படுத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மேற்கு வங்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

அருகில் உள்ள பள்ளி என்ற புதிய முயற்சியின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறந்த வெளியில் பாடங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். துணை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை ஒன்றிணைத்து குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி வழங்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

இதனால் குழந்தைகள் நீண்ட காலமாக பாடங்களை இழந்துள்ளனர். இதனை கருத்திக் கொண்டு நாங்கள் இப்போது மைதானத்தில் திறந்த வெளி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளோம். தொடக்கக் கல்வியைத் தவிர, சொற்பொழிவு, ஓவியம் போன்ற சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார். 
Tags:    

Similar News