இந்தியா
மகாத்மா காந்தி

குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்திற்குரிய பாடல் நீக்கம்!

Published On 2022-01-23 02:28 GMT   |   Update On 2022-01-23 02:28 GMT
1950-ம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் 'என்னுடன் இருங்கள்' பாடல் இடம்பெற்று வருகிறது.
புது டெல்லி:

குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம். 

பிறகு ஜனவரி 29-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும் நாளில், முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவா் டெல்லிக்கு வந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இந்த நிகழ்ச்சி பாதுகாப்புப் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்கு விருபமான பாடலான ‘என்னுடன் இருங்கள்’ என்ற பாடல் இசைக்கப்படுவது வழக்கம்.  பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ பாடல், 1950-ம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கவிஞா் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா ’ (ஒட்டுமொத்த உலகத்தையும் விட இந்தியா மேலானது) என்ற பாடல் இசைக்கப்படவுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News