தவறான பதிவின் காரணமாக சிலருக்கு தடுப்பூசி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி நிலவரத்தை சரி செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. அதில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள், தடுப்பூசி போடப்பட்டவர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
கோவின் இணையதளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இணையதளத்தில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கோவின் இணையதளத்தில் இனி ஒரே செல்போன் எண்ணில் 6 பேர் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒருவரின் தடுப்பூசி விவரம் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய முடியும். இரண்டு தவணை தடுப்பூசி நிலையிலிருந்து ஒரு தவணையாகவும் அல்லது தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் மாற்றிக்கொள்ள முடியும்.
தவறான பதிவின் காரணமாக சிலருக்கு தடுப்பூசி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி நிலவரத்தை சரி செய்து கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் மூலம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் 3 முதல் 7 நாட்களில் செய்யப்படும்.