இந்தியா
தலைமை தேர்தல் ஆணையம்

ஐந்து மாநில தேர்தல்:பொதுக் கூட்டம் பேரணிக்கு தடை நீடிக்கப்படுமா - தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவு

Published On 2022-01-22 00:28 GMT   |   Update On 2022-01-22 00:28 GMT
ஐந்து மாநில சுகாதார செயலாளர்கள் மற்றும் மத்திய சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று காணாலி மூலம் ஆலோசனை நடத்துகிறது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் அடுத்த மாதம்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில்  பொதுக்கூட்டம், சைக்கிள் பேரணி, பாத யாத்திரை உள்ளிட்டவைகளுக்கு  22ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாளையுடன் இந்த தடை முடிவடையும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தின் முக்கிய கூட்டம் இன்று நடைபெறுகிறது.  ஐந்து மாநில சுகாதார செயலாளர்கள் மற்றும் தலைமை சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறது.  

இந்த  கூட்டத்தில், கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, அதன் பின்னரே தேர்தல் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு  தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா அல்லது மேலும் நீட்டிப்பதா என்பது இன்றைய கூட்டத்தின் முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News