இந்தியா
நேதாஜி சிலை

டெல்லி இந்தியா கேட் பகுதியில் பிரமாண்ட நேதாஜி சிலை - பிரதமர் மோடி

Published On 2022-01-21 09:49 GMT   |   Update On 2022-01-21 11:27 GMT
சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களில் முதன்மையானவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய ராணுவத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது

இந்நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒட்டுமொத்த நாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரமாண்டமான கிரானைட் சிலை அமைக்கப்படும். இது நேதாஜிக்கு இந்தியா செலுத்தக்கூடிய நன்றிக்கடனாகும்.

நேதாஜிக்கு பிரமாண்ட சிலை அமைக்கும் பணி முடிவடையும் வரை அங்கு நேதாஜியின் உருவம் மின் ஒளியில் திரையிடப்படும். அந்த மின் ஒளி வடிவிலான சிலையை நேதாஜியின் 125-வது பிறந்தநாளான நாளை மறுதினம் திறந்துவைக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News