இந்தியா
அச்சுதானந்தன்

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு கொரோனா

Published On 2022-01-21 05:22 GMT   |   Update On 2022-01-21 05:22 GMT
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 46,387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 54,87,898 ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடுதலாக உள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள முன்னாள் முதல் மந்திரியான 98 வயது அச்சுதானந்தனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் நடிகர் துல்கர் சல்மானுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News