இந்தியா
மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் - இணையதளம், யூ டியூப் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2022-01-19 20:07 GMT   |   Update On 2022-01-19 20:07 GMT
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 19 யூ டியூப் சேனல்கள், 2 இணைய தளங்கள் கடந்த மாதம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களைப் பரப்பும், நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் இணைய தளங்கள், யூ டியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News