இந்தியா
பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத்

மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை... உ.பி. தேர்தலில் 30 பேரை பிரசாரத்திற்கு களமிறக்கியது பாஜக

Published On 2022-01-19 10:00 GMT   |   Update On 2022-01-19 11:23 GMT
முதற்கட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சியின் தலைமை 30 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. முதல் இரண்டு கட்ட தேர்தலுக்காக சமீபத்தில் 107 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்ட பாஜக, பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

இந்நிலையில், முதற்கட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சியின் தலைமை, 30 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. இதில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதின் கட்காரி, ஸ்மிருதி இரானி, கட்சியின் எம்.பி.  ஹேமமாலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் உத்தர பிரதேசத்திலும், மத்தியிலும் பாஜக அரசு செய்த மக்கள் நலப் பணிகளை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்க உள்ளனர். 

உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக அவரது மகன் சேர்க்கப்பட்டதையடுத்து அஜய் மிஸ்ரா சர்ச்சையில் சிக்கியது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News