இந்தியா
ரிசர்வ் வங்கி

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை

Published On 2022-01-19 02:19 GMT   |   Update On 2022-01-19 02:19 GMT
ஒமைக்ரான் அலை அல்ல, திடீர் வெள்ளம் என்றும், இந்திய பொருளாதார மீட்பு வலுவாக உள்ளது என்றும் பாரத ரிசர்வ் வங்கி அறிக்கை சொல்கிறது.
மும்பை :

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான், இந்தியாவில் கடந்த மாதம் 2-ந் தேதி நுழைந்தது. தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நுழைந்தது. இந்த தொற்றை தடுப்பதற்காக மறுபடியும் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாரத ரிசர்வ் வங்கி தனது பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-

* ஒமைக்ரான் தலைமையில் ஏற்பட்டிருக்கிற கொரோனா 3-வது அலை, அலையை விட திடீர் வெள்ளமாக மாறக்கூடும்.

* ஒமைக்ரான் காரணமாக ஏற்பட்ட தொற்று அதிகரிப்பு தற்காலிகமாக இருந்தாலும் இந்திய பொருளாதார மீட்சியைத்தந்துள்ளது.

* தொற்று நோயின் 2-வது அலையின் வீழ்ச்சியுடன் இந்திய பொருளாதாரத்தில் நடந்து வருகிற மீட்பு, ஒமைக்ரான் மாறுபாட்டின் விரைவான பரவுதலால் குறிக்கப்பட்ட 3-வது அலையில் தொற்றுநோய்களின் விரைவான எழுச்சியில் இருந்து பெரும்காற்றை எதிர்கொள்கிறது.

* தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி 13 அன்று 2 லட்சத்து 71 ஆயிரமாக உயர்ந்ததால், குறிகாட்டிகள் அடிப்படை எண்களைக் காட்டிலும் குறைந்து விட்டன. இது கடந்த மே மாத மத்திப்பகுதியில் இருந்து அதிகபட்சமாக 15 லட்சமாக இருந்தது. இருப்பினும் ஒட்டுமொத்த தேவை நிலைமைகள் மீள்தன்மையுடன் உள்ளன.

* இ-வழிபில்களின் வெளியீடு டிசம்பரில் 7 கோடியே 20 லட்சமாக உயர்ந்தது.

* உற்பத்தி மற்றும் கட்டுமானத்தில் வலுவான முன்னேற்றத்துடன் நெடுஞ்சாலை சுங்க வரி வசூல் டிசம்பரில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

* டிசம்பரில் மின்சார பயன்பாடு 4.5 சதவீதம் அதிகரித்து 11 ஆயிரத்து 030 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

* இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மைய தரவுகள்படி, தொழிலாளர் பங்கேற்பு விகிதம் டிசம்பர் மாதம் 40.9 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த 2020 டிசம்பருக்கு பிறகு மிக அதிகம் ஆகும். வேலையின்மை விகிதம் 7.9 சதவீத அளவுக்கு மோசம் அடைந்தாலும், வேலை வாய்ப்பு விகிதம் 23 அடிப்படைப் புள்ளிகளால் மேம்பட்டுள்ளது.

* ஏற்றுமதி வளர்ச்சி பரந்த அடிப்படையிலானது. மேலும் 10 முக்கிய சரக்கு குழுக்கள், கொரோனாவுக்கு முந்தையை நிலையை விட விரிவாக்கத்தை பதிவு செய்துள்ளன.

* நவம்பர், டிசம்பர் இடையே சாதகமற்ற விளைவுகளால் பண வீக்கம் அதிகரித்தது.

* பணம் மற்றும் கடன் நிலைமைகள் படிப்படியாக ஆனால் நீடித்த முறையில் வங்கிக்கடன் பெறுவதின்மூலம் மேம்பட்டு வருகின்றன.

* இந்தியாவில் டிஜிட்டல் பண பட்டுவாடா சூழல் அமைப்பும் வேகமாக விரிவு அடைந்து வருகிறது.

* உற்பத்தி, வினியோகச்சங்கிலிகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் இடையூறுகளுக்கு மத்தியில் பணவீக்கம் உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* பணவீக்கம் குறைவதற்கு அதிக நேரம் எடுக்கலாம் என்றாலும் வினியோகச்சங்கிலி தடைகள் மற்றும் அனுப்பும் செலவுகள் மெதுவாக தளர்த்தப்படுகின்றன என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இது உலகாளவிய மீட்சியை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் அனைத்து ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News