இந்தியா
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

குற்றவாளிகளுக்கு தேர்தலில் டிக்கெட் - சமாஜ்வாதி குறித்து யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

Published On 2022-01-18 04:43 GMT   |   Update On 2022-01-18 05:02 GMT
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்,அந்த குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்பு நிறுத்துவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
காசியாபாத்: 

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கு தாவி உள்ளனர்.  இது பா.ஜ.க.வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் காசியாபாத் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பின்னர் ஏஎன்ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:  

குறிப்பிட்ட சில தொகுதிகளில் குற்றவாளிகளுக்கு சமாஜ்வாதிகட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி வருகிறது. கைரானாவிலிருந்து வெளியேறிய வணிகர்கள், முசாபர்நகர் கலவர குற்றவாளிகள் மற்றும் வரலாற்றை திரித்து எழுதுபவர்களை வேட்பாளர்களாக அறிவித்ததன் மூலம், சமாஜ்வாதி கட்சி மீண்டும் அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கான்பூர் முன்னாள் போலீஸ் அதிகாரி அசிம் அருண், பா.ஜ.கவில்  இணைந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,  கலவரம் செய்பவர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைகிறார்கள், கலவரம் செய்பவர்களை பிடிப்பவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News