இந்தியா
கெஜ்ரிவால்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி வேட்பாளரை இன்று அறிவிக்கிறார் கெஜ்ரிவால்

Published On 2022-01-17 21:29 GMT   |   Update On 2022-01-17 21:29 GMT
பஞ்சாப் மாநிலத்தில் குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைப்பிடிக்கப்படுவதால் சீக்கியர்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வார்கள். 
 
எனவே, சீக்கியர்கள் தங்களின் புனித பயணமான குரு ரவிதாஸ் நினைவிடத்திற்குச் செல்வதில் ஏற்படும் இடையூறை தவிர்க்க 
தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதின.

இதன் எதிரொலியாக, பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் யார் என ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகின.

Tags:    

Similar News