இந்தியா
ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரிப்பு

Published On 2022-01-14 04:13 GMT   |   Update On 2022-01-14 04:13 GMT
இந்தியாவில் ஒரே நாளில் 265 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. 

இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 5,488 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 5,753 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 28 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரானை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

Tags:    

Similar News