இந்தியா
அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று

Update: 2022-01-12 18:21 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.
சண்டிகர்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News