இந்தியா
கேரளாவில் மனைவி மாற்றம் வழக்கில் 7 பேர் கைது

பணத்திற்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் - 7 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

Published On 2022-01-11 02:24 GMT   |   Update On 2022-01-11 02:24 GMT
இந்த கும்பல் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள டெலிகிராம், மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்து வந்ததாக கேரள மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோட்டயம்:

கேரள மாநிலம்  சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர்,
காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவர் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நபருடன் உறவு  வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான உறவுக்கு,  தான் உட்படுத்தப்பட்டதாகவும் அந்த பெண் தமது புகாரில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து இந்தப் புகாரை விசாரித்த கேரள காவல்துறையினர், அந்த பெண்ணின் கணவர் மற்றும் நண்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. அதன்படி கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் டெலிகிராம் மற்றும் மெசஞ்ஜர் செயலிகள் மூலம் பலர் குழுக்களாக இணைந்துள்ளனர். இந்த குழுவில் இணையும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்ட பின்னர் தங்களது மனைவிகளை மாற்றிகொண்டது தெரியவந்துள்ளது. 

கேரளாவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் இந்த குழுவில் இணைந்துள்ளனர். பணத்திற்காக பலர் இந்த செயலில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து  மனைவி பரிமாற்றம் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏழு பேரை கருகாச்சலில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் 25 பேர் கண்காணிக்கப்படுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.  சமூக விரோதம் மற்றும் சட்ட விரோதமாக செயல்படும் இந்த குழுக்களில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருந்ததால், விரிவான விசாரணை நடத்தப்படும் என கேரளா போலீசார் குறிப்பிட்டுள்ளனர். பணத்திற்காக மனைவியை மாற்றிக் கொள்ளும் சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News