இந்தியா
கொலை செய்யப்பட்ட தீரஜ்

கேரளாவில் துணிகரம் - கல்லூரி தேர்தலில் மாணவர் குத்திக் கொலை

Published On 2022-01-10 19:49 GMT   |   Update On 2022-01-10 19:49 GMT
கல்லூரி மாணவர் தீரஜ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது.
இடுக்கி:

இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21). கண்ணூரில் வசித்து வந்த இவர் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்.

கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் தீரஜ், அபிஷித், அமல் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் தீரஜ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இளைஞரணி பிரமுகரை இடுக்கி போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கல்லூரி மாணவர் தீரஜ் கொல்லப்பட்டுள்ளதற்கு முதல் மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News