இந்தியா
மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி

இரவு 10 மணி வரை கொரோனா தடுப்பூசி போடலாம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்

Published On 2022-01-10 09:02 GMT   |   Update On 2022-01-10 12:18 GMT
கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கொரோனா 2 தவணை தடுப்பூசிகள் மற்றும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கான தடுப்பூசி ஆகியவற்றை தொடர்ந்து இன்று முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையும் தொடங்கி உள்ளது.

இதனையடுத்து கொரோனா தடுப்பூசி மையங்களில் அதிக கூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி தெரிவித்துள்ளார். 

தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் நேர நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் இரவு 10 மணி வரை தகுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கொரோனா தடுப்பூசி மையங்கள் வழங்கலாம் என்றும்  மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பாக அனைத்து தடுப்பூசி மையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News