இந்தியா
பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த புதிதாக பதிவுசெய்ய தேவையில்லை - மத்திய அரசு

Published On 2022-01-07 19:28 GMT   |   Update On 2022-01-07 19:40 GMT
பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி 10-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கழிந்த பிறகே பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கூடுதலாக பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் போடுவது பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிக்கான காலஅட்டவணை சனிக்கிழமை வெளியிடப்படும்.

ஆன்லைன் வழியே பதிவு செய்வதற்கான வசதி சனிக்கிழமை மாலை தொடங்கும். நேரடியாக மையத்திலேயே பதிவு செய்து கொள்ளும் முறை வரும் 10-ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News