இந்தியா
சிறார்களுக்கு தடுப்பூசி, பிரதமர் மோடி

நாடு முழுவதும் 5 நாட்களில் 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி - பிரதமர் பெருமிதம்

Published On 2022-01-07 08:53 GMT   |   Update On 2022-01-07 13:14 GMT
கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புதுடெல்லி:

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் 530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் இதை திறந்து வைத்தார். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது  பிரதமர் பேசியதாவது:

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள மொத்த மக்கள் தொகையில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். வெறும் 5 நாட்களில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.  

நாட்டின் உள்ள மூத்த குடிமக்களின் முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவு குறைந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு மிச்சப்படுத்தியுள்ளனர். பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் மூலம் 12 லட்சம் ஏழைகள் இலவச டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனர். 

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News