இந்தியா
பினராயி விஜயன்

பினராயி விஜயன் 15-ந்தேதி அமெரிக்கா பயணம்

Published On 2022-01-07 02:20 GMT   |   Update On 2022-01-07 02:20 GMT
மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பரிசோதனை மற்றும் சிகிச்சை முடித்து 29-ந்தேதி நாடு திரும்புகிறார்.
திருவனந்தபுரம் :

மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 15-ந்தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை முடித்து அவர் 29-ந்தேதி நாடு திரும்புகிறார்.

அவரது இந்த பயணத்தில் மனைவி கமலா மற்றும் உதவியாளர் சுனீஷ் ஆகியோர் உடன் செல்கின்றனர். முதல்-மந்திரியின் இந்த பயண செலவினங்களை மாநில அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்து உள்ளார்.

பினராயி விஜயன் கடந்த 2018-ம் ஆண்டிலும் அமெரிக்காவின் மின்னெசோட்டாவில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News