இந்தியா
வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, ராகுல்காந்தி

சீனா அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் - மத்திய அரசு உறுதி

Published On 2022-01-05 00:39 GMT   |   Update On 2022-01-05 00:39 GMT
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நிலைமையை ராணுவம் சிறந்த முறையில் கையாண்டு வருவதாக வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி,தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ராணுவம் தனது தேசியக் கொடியை ஏற்றியது குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைக்க வேண்டும் என்று  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, முதன்முறையாக பதில் அளித்துள்ளார்.

இந்திய ராணுவம் நிலைமையைக் கையாண்டு வருகிறது,  நான் பேச விரும்பவில்லை.  அங்கு சீனாவுக்கு தகுந்த பதிலடி  கிடைத்து வருகிறது. பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவது உள்பட சீனா ஏதாவது அத்துமீறினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

அவரது ட்வீட்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. தாய்லாந்தில் அவரது சொந்த தாயார் சீனரை சந்தித்தார். ஆனால் இங்கு இவர் என்ன பேசுகிறார்? மோடி அரசு இந்த பிரச்சினைக்கு நன்றாக பதிலளிக்கிறது. பிரச்சினை என்னுடையது அல்ல. ராணுவம் அதற்கு பதிலளிக்கும். இவ்வாறு வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News