இந்தியா
கர்நாடகா மந்திரிகள் சுதாகர் மற்றும் அசோகா

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

Published On 2022-01-04 21:14 GMT   |   Update On 2022-01-04 21:14 GMT
திரையரங்குகள், உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதி
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அதிகரிப்பால் அங்கு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதையடுத்து அந்த மாநிலத்தின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு  எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதாக கர்நாடக கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி  டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போது  தொற்று விகிதம் முறையே 15 நாட்கள் மற்றும் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகும். ஆனால் தற்போது 1 முதல் 2 நாட்களில் தொற்று விகிதம்  இரட்டிப்பாவதால் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மந்திரி டாக்டர் கே சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக மந்திரி ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 வாரங்களுக்கு பப்கள், கிளப்புகள், உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அரங்குகள் 50% இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News