இந்தியா
எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்

ஜம்முகாஷ்மீர் வழியே ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விரட்டியடிப்பு - ராணுவம் தகவல்

Published On 2022-01-03 22:53 GMT   |   Update On 2022-01-03 22:53 GMT
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதிச் செயல்களை முறியடிப்பதில் உறுதியுடன் உள்ளதாக ஜம்மு பாதுகாப்பு பிரிவு லெப்டினன்ட் கர்னல் தேவேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஜம்மு ;

கடந்த 2ம் தேதி அதிகாலை வேளையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தையொட்டிய எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி வழியே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

இதையடுதது அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில்
ஒரு பயங்கரவாதி காயமடைந்தார். அவருடன் கூட்டாளிகள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

அந்த பகுதியை ஆய்வு செய்தபோது பாகிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜம்மு பாதுகாப்பு படை பிரிவின் லெப்டினன்ட் கர்னல் தேவேந்திர ஆனந்த், தமது அறிக்கையில், தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதிகளின் சதி திட்ட முயற்சிகளை இந்திய ராணுவம் விழிப்புடனும் செயல்பட்டு முறியடிப்பதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News