இந்தியா
மும்பையில் பள்ளிகள் ஜனவரி 31 ஆம் தேதிவரை மூடல்

மும்பையில் ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகள் மூடல் - 10 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும் நடைபெறும் என அறிவிப்பு

Published On 2022-01-03 21:31 GMT   |   Update On 2022-01-04 00:56 GMT
பிற வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12,160 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்த மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உள்ளது. 

இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும் நடைபெறும் என்றும் பிற பள்ளிகள் ஜனவரி 31ம் தேதிவரை மூடப்படும் என்றும் தானோ மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 

இதேபோல் மும்பையிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே  வகுப்பறைகள் இயங்கும்.  1 முதல் 9ம் வகுப்புகள் வரையிலும் மேலும் 11 ஆம் வகுப்பும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள 30,500 மருத்துவமனை படுக்கைகளில், 3,500 படுக்கைகள் மட்டுமே தற்போது கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. போதுமான ஆக்ஸிஜன் சப்ளை, மருந்துகள், வென்டிலேட்டர்கள், ஐசியூ வசதிகள் தயாராக உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News